ஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |
தமிழ் சினிமாவின் தங்கபதுமை என்று அழைப்படுபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.
இதன் உறுதி செய்யும் விதமாக, இருவரும் அவ்வப்போது ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும், செல்பிகளையும் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது போன்ற படங்களை வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள சீக்கிய மத வழிபாட்டு தலமான பொற்கோயிலுக்கு சென்று இருவரும் வழிபாடு நடத்தி உள்ளனர்.
இந்த புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். தரிசனம் முடிந்தபின்னர் அங்குள்ள கோவில் அன்னதான கூடத்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து ரொட்டி சாப்பிடுவது போன்ற வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.