மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
த்ரிஷா இரண்டு விதமான தோற்றத்தில் நடித்து வரும் படம் பரமபதம் விளையாட்டு. இதில் அவர் மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார். திருஞானம் இயக்குகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.
படம் பற்றி திருஞானம் கூறும்போது, த்ரிஷா முதன்முதலாக இதுப்போன்ற கதையில் நடிக்கிறார். த்ரிஷாவிற்கு இது புதுமையான, முக்கியமான படமாக இருக்கும். கடினமான காட்சியில் ஒரே டேக்கில் நடித்தார். படத்தில் நிறைய திருப்பங்கள் இருக்கும், ரசிகர்களுக்கு பிடிக்கும் என்கிறார் திருஞானம்.