ஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |
ஜிவி பிரகாஷை வைத்து த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா எனும் ஆபாச படத்தை கொடுத்து, இயக்குநரானவர் ஆதிக் ரவிச்சந்திரன். விமர்சனத்திற்கு உள்ளான இப்படம் வசூலை பெற்றது. தொடர்ந்து சிம்புவை வைத்து, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை கொடுத்தார்.
இப்படம், தோல்வியை தழுவி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதுதொடர்பான பஞ்சாயத்து இன்னும் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆதிக் - ஜிவி பிரகாஷ் மீண்டும் இணைந்தனர். அமைரா தஸ்துர், சஞ்சிதா ஷெட்டி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
தலைப்பு இல்லாமல் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது, காதலை தேடி நித்யா நந்தா எனும் வித்தியாசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஹாரர் படம் போன்று போஸ்டர் இருப்பதுடன், ஜிவி பிரகாஷூம் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார்.