இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மோகன்லாலை வைத்து புலிமுருகன் என்கிற சூப்பர்ஹிட் படம் கொடுத்து, மாஸ் இயக்குனராக மாறியவர் வைசாக். தற்போது மம்முட்டியை வைத்து மதுரராஜா என்கிற படத்தை இயக்கி வருகிறார். இது ஏற்கனவே மம்முட்டியை வைத்து இவர் இயக்கிய போக்கிரி ராஜா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. முதல் பாகம் போலவே மதுரையை கதைக்களமாக வைத்தே இந்தப்படம் உருவாகி வருகிறது.
அதற்கேற்றவாறு இந்தப்படத்தில் தமிழ் இளம் நடிகர்களின் பட்டாளத்தையும் வரிசையாக இணைத்து வருகிறார் இயக்குனர் வைசாக். இதில் மம்முட்டியின் தம்பியாக ஜெய் முதலில் ஒப்பந்தமாக, அடுத்ததாக நடிகர் ஆர்கே.சுரேஷ் நுழைந்தார்.
இதையடுத்து வீரம் புகழ் நடிகர் பாலாவும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. வைசாக்கின் புலி முருகன் படத்திலும் பாலா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.