தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய திரைப்பட சர்வதேச விருதுகள் எனப்படும் சைமா விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன. 2018-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா துபாயில் கோலாகலமாக நடந்தது. இதில் விஜய்யின் மெர்சல் படத்திற்கு 5 விருதுகள் கிடைத்தன.
சிறந்த நடிகருக்கான விருது சிவகார்த்திகேயன், மாதவனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது நயன்தாரா மற்றும் அதிதி பாலனுக்கு கிடைத்தன. வாழ்நாள் சாதனையாளர் விருது பிரபல பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கப்பட்டது. ஹன்சிகாவுக்கு சிறந்த இளம் தலைமுறையினருக்கான யூத் ஐகான் விருது வழங்கப்பட்டது.
மெர்சலுக்கு 5 விருதுகள்
விஜய் நடிப்பில் வெளியான, மெர்சல் படத்திற்கு, சிறந்த இயக்குநர், வில்லன், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என 5 விருதுகள் கிடைத்தன.
விருதுகள் விபரம் வருமாறு...
சிறந்த படம் : விக்ரம் வேதா
சிறந்த நடிகர் : சிவகார்த்திகேயன் (வேலைக்காரன்)
சிறந்த நடிகர் (தேர்வுக்குழு) - மாதவன் (விக்ரம் வேதா)
சிறந்த நடிகை : நயன்தாரா (அறம்)
சிறந்த நடிகை (தேர்வுக்குழு) - அதிதி பாலன் (அருவி)
சிறந்த இயக்குநர் : அட்லி (மெர்சல்)
சிறந்த அறிமுக நடிகர் : வசந்த் ரவி (தரமணி)
சிறந்த அறிமுக நடிகை : அதிதி ராவ் (காற்று வெளியிடை)
சிறந்த அறிமுக இயக்குநர் : அருண் பிரபு புருஷோத்தமன் (அருவி)
சிறந்த துணை நடிகர் : எம்.எஸ்.பாஸ்கர் (8 தோட்டாக்கள்)
சிறந்த துணை நடிகை : ஷிவதா நாயர் (அதே கண்கள்)
சிறந்த காமெடி நடிகர் : சூரி (சங்கிலி புங்கிலி கதவ தொற)
சிறந்த வில்லன் : எஸ்.ஜே.சூர்யா (மெர்சல்)
சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான் (மெர்சல்)
சிறந்த பாடகர் : சித் ஸ்ரீராம் (மெர்சல்)
சிறந்த பாடகி : லக்ஷிமி சிவனேஷ்வரலிங்கம் (போகன்)
சிறந்த பாடலாசிரியர் : விவேக் (மெர்சல்)
சிறந்த ஒளிப்பதிவு : ரவி வர்மன் (காற்று வெளியிடை)
வாழ்நாள் சாதனையாளர் விருது : பாடகி பி.சுசீலா