வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ப்ரியா பவானி சங்கர். மேயாதமான் படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார். தற்போது அதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ராதராவி, ராதிகா, ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். டி.முருகானந்தம், ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார்கள். 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
இது ஒரு கேங்ஸ்டர் கதை. ஆனாலும் வழக்கமான கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அதர்வா கேரக்டர் இப்போதைக்கு சஸ்பென்ஸ். பிரியா பவானி சங்கர் ஸ்கூல் டீச்சராக நடிக்கிறார். ராதிகா, ரதாரவி காமினேஷன் படத்தில் பெரிய அளவில் பேசப்படுவதாக இருக்கும், இருவருமே கதை கேட்ட உடன் நடிக்க ஒப்புக் கொண்டார்கள். மதுரை பின்னணியில் நடக்கும் கதை. அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது. என்கிறார் ஸ்ரீ கணேஷ்.