'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இனியா, வாகைசூட வா என்ற படத்தின் மூலம் புகழ்பெற்றார். அதன்பிறகு மவுனகுரு, அம்மாவின் கைபேசி, கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள், மாசானி, நான் சிவப்பு மனிதன் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது கன்னட சினிமாவில் அறிமுகமாகிறார்.
பிரமோத் சக்ரவர்த்தி இயக்கும் ட்ரோனா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் சிவராஜ்குமார், ஸ்வாதி சர்மா, சாது கோகிலா உள்பட பலர் நடிக்கிறார்கள். 3 ஹீரோயின்களில் ஒருவராக இனியாக நடிக்கிறார். சிவராஜ்குமார் முன்பு நடித்த படத்தின் பார்ட் 2 இந்தப் படம். இதன் படப்பிடிப்புகள் தற்போது பெங்களூரில் நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்டு இனியா நடித்து வருகிறார்.
இதுதவிர, மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடிக்கிறார். தமிழில் அவர் நடித்து முடித்துள்ள பொட்டு படம் வெளிவர வேண்டியது இருக்கிறது.