கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, சமீபகாலமாக தெலுங்கு மற்றும் தமிழ் பட முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இப்போது அவர், வாழ்க்கையும் சினிமாவாக தயாராகி கொண்டிருக்கிறது. அவர், அவராகவே நடித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த சில வாரங்களாக மவுனமாக இருந்த ஸ்ரீரெட்டி, இப்போது தனது பாலியல் குற்றச்சாட்டுகளை கிரிக்கெட் வீரர்கள் பக்கம் திரும்பியிருக்கிறார். அதுவும் முதல் வீரர் இந்தியாவே போற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். அவர் ஐதராபாத்தில் ஒரு பிரபல நடிகையுடன் ரொமான்சில் ஈடுபட்டதாக ஸ்ரீரெட்டி, தனது பேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.