இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் இன்று காலை 9 மணிக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.
வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே மூன்று மொழிகளிலும் சேர்த்து 4 லட்சம் பார்வைகளை யு டியூபில் கடந்தது. டீசரைப் பார்த்த ஒவ்வொருவரும் அதன் விஷுவல் எபெக்ட்ஸ், கிராபிக்ஸ் ஆகியவற்றால் மிரண்டு போயிருப்பார்கள் என்பது உண்மை.
2.0 என்பது வெர்ஷனைக் குறிக்கும். அதற்கேற்றபடியே எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக வேறு ஒரு பதிப்பாக இந்த டீசர் அமைந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரிடமும் தவறாமல் இருக்கும் மொபைல் போன்கள் திடீரெனக் காணாமல் போனால் என்ன ஆகும் என்பதன் கற்பனையாக டீசரில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு நிமிடம் 29 வினாடிகள் உள்ள இந்த டீசரில் ஒரு நிமிடத்திற்கு விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்று மிரட்டியுள்ளன.
கற்பனைக்கும் மிஞ்சிய அந்தக் காட்சிகளை கம்ப்யூட்டர் திரையில் பார்ப்பதற்கே மிரட்டலாக இருக்கும் போது 3டியில் பெரிய திரையில் பார்க்கும் போது எப்படியிருக்கும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது.
டீசரில் ரஜினிகாந்த் பேசும் சில வினாடி வசனம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அக்சய் குமார் ஒரு சில வினாடிகள் மட்டுமே வருகிறார். எமி ஜாக்சனுக்கு அது கூட இல்லை. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, ரகுமானின் பின்னணி இசை ஆகியவற்றைப் பார்க்கும் போது ஹாலிவுட் படத்தைப் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.
இந்தியத் திரையுலகில் இதுவரை வந்திராத அளவிற்கு 2.0 படம் இருக்கும் என்பதை இந்த டீசர் உணர்த்துகிறது. தமிழ் சினிமா இப்படி ஒரு படத்தை விரைவில் கொடுக்கப் போகிறது என்பதற்கு பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
இணையதளத்தில் 2டி வடிவில் டீசர் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே தியேட்டர்களில் 3டி வடிவில் ரஜினி ரசிகர்களுக்கு இந்த டீசர் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 1000 தியேட்டர்களில் 3டி வடிவில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் 3டி வடிவில் டீசர் வெளியிடப்பட்ட முதல் படம் என்ற பெருமையை 2.ஓ பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் ரூ.545 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள 2.ஓ படம் நவம்பர் 29 ம் தேதி ரிலீசாக உள்ளது.