ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் சேதுபதி நடித்து இந்த ஆண்டு ஏற்கெனவே 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், ஜுங்கா' ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இதில், 'ஜுங்கா' மட்டுமே மிகச் சுமாராக ஓடியது. அடுத்து இந்த ஆண்டு முடிய உள்ள நான்கு மாதங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ள நான்கு படங்கள் வெளியாகிவிடும் நிலை உள்ளது.
இந்த மாதம் 27ம் தேதி 'செக்கச் சிவந்த வானம்' படம் வெளியாகிறது. அதற்கடுத்த வாரமே அக்டோபர் 4ம் தேதி '96' படம் வெளியாக உள்ளது. அதன் பிறகு 'சீதக்காதி' படமும், 'சூப்பர் டீலக்ஸ்' படமும் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வார இடைவெளிக்குள் 'செக்கச் சிவந்த வானம், 96' ஆகிய படங்கள் வெளிவருவதும் உகந்த சூழல் அல்ல திரையுலகில் சிலர் கருதுகிறார்கள். ஆனால், 'செக்கச் சிவந்த வானம்' படம் மல்டி ஸ்டார் படம் என்பதால் பிரச்சினையில்லை.
மணிரத்னம் படத்தில் யார் நடித்தாலும் கடைசியில் அந்தப் படத்தை மணிரத்னம் படம் என்றுதான் பாராட்டுவார்கள். அதில் நடித்தவர்களுக்கு அவ்வளவாகப் பெயர் கிடைக்காது. எனவே, அது விஜய் சேதுபதியை அதிகம் பாதிக்காது. '96' படம் மீது எதிர்பார்ப்பு இருப்பதால் அதன் ரிசல்ட் தான் விஜய் சேதுபதியின் அடுத்த வெளியீடுகளான 'சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ்' ஆகிய படங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.