Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீமராஜாவுக்கு 8 கோடியில் அரண்மனை கட்டிய முத்துராஜ்

12 செப், 2018 - 12:42 IST
எழுத்தின் அளவு:
Seemaraja-palace-made-in-Rs.8-crore-budget

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் நடிக்கும் சீமராஜா நாளை வெளிவருகிறது. இந்தப் படத்தின் கடைசி 20 நிமிடங்கள், சிவகார்த்திகேயன் தமிழக மன்னனாக நடித்துள்ளார். இது படத்தின் ஹெலைட்டான விஷயம் என்று தயாரிப்பு தரப்பினரே கூறிவருகிறார்கள். இந்த போர்ஷனுக்காக அரண்மனை செட் போட்டவர் ஆர்ட் டைரக்டர் முத்துராஜா. இதுபற்றி அவர் கூறியதாவது:

வரலாற்று காலத்தையும் இப்போது இருக்கிற சூழலையும் இணைக்கிற மாதிரி நிறைய விஷயங்கள் பண்ணியிருக்கிறோம். இப்போது இருக்கும் சூழலை குற்றாலம் அருகில் செட் போட்டு எடுத்தோம். அந்தக்கிராமம், அதில் இருக்கின்ற சின்னச் சின்ன சந்து உட்பட எல்லாமே செட் தான். மன்னர் காலத்து காட்சிகளுக்கு மகாபலிபுரம் அருகில் செட் போட்டோம். பிளாஷ்பேக் காட்சியில போர் காட்சிகளுக்காக போடப்பட்ட செட்டை, அதற்கு பிறகு இப்போதுள்ள காட்சிகளுக்காக மார்க்கெட்டாக மாற்றினோம்.


இந்த செட்களை உருவாக்க 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை பார்த்தார்கள். தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதியில் உள்ள அரண்மனைகளை நேரில் சென்று பார்த்து இதை உருவாக்கினோம். 200 ஏக்கர் நிலத்தில் இதைச் செய்தோம். இதற்காக 8 கோடி ரூபாய் வரைக்கும் செலவானது. சீமராஜாவில் என் வேலை நன்கு கவனிக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு தான். அவர் என் கலை வேலையின் ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களையும் தன் கேமராவில் பதிவு செய்திருக்கிறார் என்கிறார் முத்துராஜ்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தத்து பிள்ளை அல்ல பெற்ற பிள்ளை : நடிகை ரேவதிதத்து பிள்ளை அல்ல பெற்ற பிள்ளை : ... ஹீரோவாக நடிக்க மாட்டேன் : யோகி பாபு ஹீரோவாக நடிக்க மாட்டேன் : யோகி பாபு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

TechT - Bangalore,இந்தியா
14 செப், 2018 - 10:06 Report Abuse
TechT சும்ம ரீல் விடுறானுங்க 8 கோடிக்கு இவளவு சிறிய செட். ஒரு நல்ல மாளிகையே கட்டலாம்.
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
13 செப், 2018 - 04:28 Report Abuse
uthappa சரி, இப்போ அந்த மாளிகை எங்கே.ஐந்து கோடிக்கு பல ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்து இருக்கலாமே.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in