டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள இயக்குநர் ஹாஷிம் மாரிகர் திரைக்கதை எழுதி இயக்கும் புதிய படம் ஒன்று, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது.
இந்தப் படத்தில், நடிகர் ஸ்ரீகாந்த், வெகு நாட்களுக்குப் பின் நடிக்கிறார். 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் பேயாக நடித்து பயமுறுத்திய சந்திரிகா ரவி, ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.
மேலும், இந்தப் படத்தின் மூலம் மலையாள நடிகரும் மம்மூட்டியின் மருமகனுமான மக்பூல் சல்மான் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.
'அதிரடி, ஆக்ஷன் படமாக தயாரிக்கப்படவிருக்கும் இந்தப் படத்தின் மூலம், நடிகர் ஸ்ரீகாந்த், தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார்' என்கிறார் படத்தின் இயக்குநர் ஹாஷிம் மாரிகர். விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இந்தப் படத்துக்கான பெயர் செலக்ஷனில், தயாரிப்பு குழுவினர் மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது.