‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
1840-களில் பிரிட்டீஷ்காரர்களை எதிர்த்து போரிட்ட உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதையில் சிரஞ்சீவி நடித்து வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த தேசபக்தி படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப், சுதீப், விஜயசேதுபதி, நயன்தாரா, தமன்னா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை ஐதராபாத், கேரளாவில் நடந்து வந்த நிலையில், அடுத்த வாரம் ரஷ்யாவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதன்பிறகு ஜார்ஜியா செல்கிறார்கள். இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார் சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம்சரண்.
அவர் இந்த படம் குறித்து கூறுகையில், இந்த படத்தின் பட்ஜெட்டில் ஏற்கனவே திட்டமிட்டதை விடவும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. ஆனாலும் கவலைப்படவில்லை. காரணம், இந்த சைரா நரசிம்ம ரெட்டி படம் எனது தந்தையின் சினிமா கேரியரில் சிறந்த படமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். அதனால் படத்திற்கு என்னென்ன தேவையோ அதில் எந்தவித குறையும் வைக்காமல் தாராளமாக செலவு செய்து இந்த படத்தை தயாரித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார் ராம்சரண்.