பாகிஸ்தான் பாடகரை நீக்கிய சல்மான்கான் | மகிழ்ச்சியில் ஒரு அடார் லவ் நூரின் ஷெரீப் | தனுஷ் - த்ரிஷாவுக்கு ஆசியா விஷன் 2019 விருது | முடங்கி கிடந்த படத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்த மம்முட்டி | ஆதித்யா வர்மா ஆன அர்ஜூன் ரெட்டி ரீ-மேக் | சிவகார்த்திகேயன் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் | ஹிந்தி பாடலை போட்டு பாடலின் காட்சியை படமாக்கிய சீனுராமசாமி | மே மாதம் சிவகார்த்திகேயனின் இரண்டு படங்கள் ரிலீஸ் | சூப்பர் ஹீரோவாகிறார் ஜெய் | 43 ஆண்டுகளுக்குப்பிறகு பரத நாட்டியமாடிய சுஹாசினி |
பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ், அடுத்து ஒரு படத்தை இயக்க ஆரம்பித்திருக்கிறார்.
இடையில், கெளதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா', பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி 2', வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' மற்றும் 'த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த பஹிர்' என நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கிவிட்டார். 'பவர் பாண்டி' படம் ரிலீஸானபோதே அடுத்ததாக ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் ஒரு படத்தை இயக்கப் போவதாகவும், 'பாகுபலி' போல வரலாற்றுப் படமாக அது இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.
அந்த செய்திகளை உண்மையாக்குவதுபோல் தனுஷின் இரண்டாவது படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ்தான் தயாரிக்கிறது. 'பவர் பாண்டி' படத்தில் ராஜ்கிரணின் சின்ன வயது வேடத்தில் நடித்த தனுஷ், தற்போது இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அதிதி ராவ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில், நாகர்ஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
சிவகார்த்திகேயனின் ஆஸ்தான கலை இயக்குநரான முத்துராஜ் இந்தப்படத்தில் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். தனுஷ் உடன் தொடர்பில் இருக்கும் யாரையும் தன்னுடன் சேர்க்கமாட்டார் சிவகார்த்திகேயன். தன்னுடைய பி.ஆர்.ஓ. தனுஷுக்கும் பி.ஆர்.ஓ.வாக பணியாற்றினார் என்பதற்காக பி.ஆர்.ஓ.வையே மாற்றினார். இப்போது தன்னுடைய கலை இயக்குநர் தனுஷ் படத்தில் பணியாற்றுவதை எப்படி எடுத்துக்கொள்வாரோ?