டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கில் வெளியான 100% லவ் படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதனை எம்.எம்.சந்திரமவுலி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்து இசை அமைக்கிறார். ஷாலினி பாண்டே, சதீஷ், நாசர், ஜெயசித்ரா, மனோபாலா, தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கிறார்கள். கணேஷ் ராஜவேலு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை பற்றி இயக்குனர் சந்திரமவுலி கூறியதாவது:
இது தெலுங்கு ரீமேக்காக இருந்தாலும் தமிழுக்கு ஏற்ற சில மாறுதல்களை செய்திருக்கிறோம். குறிப்பாக தெலுங்கில் தமன்னா நடித்திருந்தார். அவருக்கு கொஞ்சம் வடநாட்டு முகம் இருக்கும். ஆனால் கதைக்கு தேவை அடுத்து வீட்டு பெண் போன்ற முகம். அதனால்தான் ரீமேக்கிற்கு தமன்னாவை அணுகாமல் ஷாலினி பாண்டேவை நடிக்க வைத்தோம்.
காதலனுக்கும், காதலிக்கும் இடையில் வரும் ஈகோதான் படத்தின் திரைக்கதை. அதற்கு வலு சேர்க்கும் வகையில் ஜி.வி.பிரகாஷ், ஷாலினியின் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. இருவரின் கேரியரிலும் இந்தப் படம் முக்கியமானதாக இருக்கும். படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. இப்போதே படத்தின் வியாபாரம் பற்றி நிறைய பேர் பேசி வருகிறார்கள். ரிலீசுக்கு முன்பே படம் விற்றுவிடும் என்கிற நம்பிக்க இருக்கிறது. என்கிறார் சந்திரமவுலி.