தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்குத் திரையுலகத்தின் இளம் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'நா பேரு சூர்யா நா அல்லு இந்தியா' சுமாரான வெற்றியைப் பெற்றது. அடுத்து விக்ரம் குமார் இயக்கத்தில் தெலுங்கில் நடிக்க உள்ளார் அல்லு. அதோடு ஹிந்தியில் தயாராக உள்ள '83' படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
1983ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி பற்றிய பயோபிக் படமாக இந்தப் படம் உருவாக உள்ளது. கபில்தேவ் கதாபாத்திரம்தான் இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரம். அணியின் மற்ற முக்கிய வீரர்கள் கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமான நடிகர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. அந்த உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த தமிழக கிரிக்கெட் வீரரான ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் தான் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளாராம்.
அல்லு அர்ஜுன் தெலுங்கில் நடித்து ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்ட பல படங்கள் யு டியூபில் சாதனை புரிந்துள்ளதால்தான் அவர் நடிக்கத் தேர்வாகியுள்ளார் என்று சொல்கிறார்கள்.