Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓரினச் சேர்க்கை தவறல்ல : தீர்ப்புக்கு திரைப்பிரபலங்கள் வரவேற்பு

07 செப், 2018 - 13:00 IST
எழுத்தின் அளவு:
Judgement-on-LGBT-:-Film-peoples-welcomes

ஓரினச்சேர்க்கை சட்ட விரோதமானதல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனை தமிழ் நடிகைகள் பலர் வரவேற்றுள்ளனர். அவர்களின் கருத்துக்கள் வருமாறு:

கமல் :


வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. இது காலதாமதாக கிடைத்த ஒன்று. இதற்காக சுப்ரீம் கோர்ட் நன்றியை எதிர்பார்க்கக் கூடாது. இருப்பினும் அடிப்படை உரிமைகளை மதிக்கும் குடிமகன் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கமல் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

ஆர்யா :


எல்லோருக்கும் சம உரிமை இருக்க வேண்டும். சாதி, மதங்கள் கடந்து பிடித்தவர்களுடன் இருப்பது அவரவர் உரிமை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்க கூடாது. இந்த தீர்ப்பு ஒரு மாற்றத்துக்கான வழி.

குஷ்பு :


இந்த தீர்ப்புக்காகத்தான் ஓரினச் சேர்ககையாளர்கள் நெடுநாள் போராடினார்கள். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையையும், மதிப்பையும் இந்த தீர்ப்பின் மூலம் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் தகுதி உள்ளவர்கள் தான். ஓரின சேர்க்கையாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

த்ரிஷா :


முன்னேறி செல்லுங்கள், இதுதான் சம உரிமை. ஜெய்ஹோ...

கஸ்தூரி :


ஓரின சேர்க்கை குற்றம் என்ற சட்டத்தை நீக்க தொடர்ந்து நடந்த போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. காதலுக்கு கண்ணும் வயதும் சாதியும் இல்லை என்பதுபோல் பாலினம் இல்லை என்பது எனது கருத்து. மேலை நாடுகளில் இது வினோதமானது இல்லை. அன்போடு நெருங்கிய இருவரை ஒரே பாலினத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஏன் பிரிக்க வேண்டும்.

இருவர் விரும்பி செய்தால் அது குற்றம் இல்லை. விரும்பாமல் நடக்கும் கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள்தான் குற்றம். ஓரின சேர்க்கையாளர்களால் சமூகத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை. வன்முறையோ சீர்கேடுகளோ வரப்போவதும் இல்லை. ஓரின சேர்க்கைக்கு எதிரான விக்டோரியா மகாராணி காலத்து பழமையான சட்டத்தை ரத்து செய்து பரந்த மனப்பான்மையை புகுத்தி உள்ள இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஓரின சேர்க்கை பாவமோ, குற்றமோ இல்லை. அன்பு இயற்கைக்கு முரணானது இல்லை. கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொல்வதுதான் இயற்கைக்கு முரணானது.


ஸ்ரேயா :


இதுதான் உண்மையான சுதந்திரம். மற்றவர்களைப்போல ஓரின சேர்க்கையாளர்களும் சுதந்திரமாக வாழ இந்த தீர்ப்பு உரிமை வழங்கியிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி தரும் சர்ப்ரைஸ்ரஜினி தரும் சர்ப்ரைஸ் கிரிக்கெட்டை தாண்டி கபடி ஜெயிக்க வேண்டும்: விஜய் சேதுபதி கிரிக்கெட்டை தாண்டி கபடி ஜெயிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

radan - Senapati,இந்தியா
13 செப், 2018 - 10:57 Report Abuse
radan ஆண் ,பெண் துணை தேவைப்படாத தலைவர்கள், அது சார்ந்த தீர்ப்பு, கல்மழை பொழிவது சத்தியம், பாம்பே நகரில் நடந்தது போல்
Rate this:
radan - Senapati,இந்தியா
13 செப், 2018 - 10:41 Report Abuse
radan மதங்கள் எதையும் மதிக்காத அத்துவைத மடமைகள் - தன் அம்மா ,அப்பா ,மகள்,மகன்,சகோதரர்கள் இப்படி வாழ அனுமதிப்பார்களா.
Rate this:
selvam - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12 செப், 2018 - 14:00 Report Abuse
selvam ஓரினச்சேர்க்கையை ஏற்றுக்கொள்வதும் அதை நடைமுறைப்படுத்துவதும் மனிதன் என்ற விலங்கு மட்டும்தான். ஐந்தறிவுள்ள எந்த மிருகமும் இதை செய்வதில்லை. பாலினம் அறிந்து விலகி விடும். ஆறறிவுள்ள மனிதன்? எப்படி மனிதன் சமுதாயம் இனவிருத்தி அடையும்? மனித சமுதாயம் நம்மோடு அழிந்து விடாதா?
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
11 செப், 2018 - 05:40 Report Abuse
 nicolethomson ஆர்யா , கமல் போன்றோருமா?
Rate this:
John Arivoli - chennai,இந்தியா
10 செப், 2018 - 12:02 Report Abuse
John Arivoli பணம் இருக்கும் நீங்கள் எது வேண்டுமானாலும் பேசுவீர்கள் நீங்கள் அந்த தப்புகளை பண்ணுங்கள் அப்போது தெரியும் நாட்டிற்கு நல்லதா கேட்டதை சும்மா வேலைய பார்த்து டு போங்க
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Asuraguru
  • அசுர குரு
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : மகிமா நம்பியார்
  • இயக்குனர் :ராஜ்தீப்
  Tamil New Film Sathru
  • சத்ரு
  • நடிகர் : கதிர்
  • நடிகை : சிருஷ்டி டாங்கே
  • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
  Tamil New Film Kallapart
  • கள்ளபார்ட்
  • நடிகர் : அரவிந்த் சாமி
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :ராஜபாண்டி
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in