இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் என அடுத்தடுத்து தெலுங்கில் வெற்றி படங்களை கொடுத்த விஜய் தேவரரொண்டா, முதன்முறையாக தமிழில் நடிக்கும் நேரடி படம் நோட்டா. மெஹ்ரீன் ஹீரோயினாக நடிக்க, இவர்களுடன் நாசர், சத்யராஜ், எம்.எம்.பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகிறார். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் உருவாகி உள்ள இப்படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா டுவிட்டரில் வெளியிட்டார்.
அரசியல் கலந்த படமாக நோட்டாக உருவாகி உள்ளது. இதில் துணை முதல்வர் வேடத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருப்பது போன்று தெரிகிறது. வித்தியாசமான திரைக்களத்தில் உருவாகி உள்ள நோட்டா படம் ரசிகர்களை கவருமா, பொறுத்திருந்து பார்ப்போம்...!