ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
கவுதம் மேனன் தயாரித்து, இயக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார், சுனைனா, உள்பட பலர் நடிக்கிறார்கள். தர்புகா சிவா இசை அமைக்கிறார், ஆண்டனி பிரவீன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம் இது. கவுதம் மேனன் அடுத்தடுத்து தொடங்கிய படங்கள், தயாரித்த படங்கள் என அகலகால் வைத்ததில் கவுதம் மேனனுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக படப்பிடிப்பு பல முறை தடைபட்டது.
கடைசி நேரத்தில் சசிகுமார், தனுஷின் அண்ணனாக நடித்தார். இப்போது ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. டப்பிங், எடிட்டிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகளை விரைவில் முடித்து, நவம்பர் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர கவுதம் மேனன் திட்டமிட்டிருக்கிறார்.