சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
மேயாதமான் படத்தை இயக்கிய ரத்னகுமார், கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பிறகு இயக்கும் அடுத்தபடம் ஆடை. அமலாபால் முதன்மை ரோலில் நடிக்கிறார். இது கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படம்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெங்கட்பிரபு டுவிட்டரில் வெளியிட்டார். குறைந்த அளவிலான உடையணிந்து, தலையில் ரத்தம் வழிந்தபடியும், கதறி அழுதபடியும், கையில் இரும்பு கம்பி உடன் அமலாபால், அந்த போஸ்டரில் இருக்கிறார்.
வித்தியாசமான கதைக்களத்தில் உணர்ச்சிகரமான படமாக, ஆடை உருவாகி வருகிறது. விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் குமார் இசையமைக்கிறார். வி ஸ்டுடியோஸ் சார்பில் விஜி சுப்ரமணியன் தயாரிக்கிறார்.