சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
மலையாளத்தில் ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். அதில் கிடைத்த புகழால் தமிழில் கவுதம் மேனன் டைரக்சனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் கூட, தமிழ் திரையுலகம் பெரிய அளவில் அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் மலையாளத்தில் கவனத்தை திருப்பியுள்ள மஞ்சிமா, கடந்த 2014ல் இந்தியில் வெளியாகி ஹிட்டான குயீன் படத்தின் மலையாள ரீமேக்கான ஜம் ஜம் படத்திலும் நடித்து முடித்தும் விட்டார் .
இந்தநிலையில், நிவின்பாலி ஹீரோவாக நடிக்கும் மைக்கேல் என்கிற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் மஞ்சிமா. ஒரு வடக்கன் செல்பி படத்தில் அருகருகே இருந்தாலும் இவர்களால் ஜோடியாக நடிக்க முடியாமல் போனது. ஆனால் இந்தப்படத்தில் காதலர்களாக நடிக்கின்றனராம் இருவரும்.. மம்முட்டியை வைத்து தி கிரேட் பாதர் என்கிற ஹிட் படத்தை இயக்கிய ஹனீப் அதேநி இந்தப்படத்தை இயக்குகிறார்.