‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சூர்யாவுடன் சிங்கம் 3 படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன், அதன்பிறகு தனது தந்தை கமலின் சபாஷ்நாயுடு படத்தில் நடித்து வந்தார். ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறாத நிலையில் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது.
தற்போது மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கத்தில் ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் நான் எடுத்துக்கொண்ட இடை வெளி என்னை நானே புரிந்து கொள்ள உதவியது. என் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை ஆய்வு செய்தேன்.
தொடர்ந்து சினிமாவில் பயணிக்கவே விரும்புகிறேன். விரைவில் தென்னிந்திய படங்களில் நடிப்பேன். அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. அம்மாவுடன் நடிக்க ஆசைப்படுகிறேன். அம்மாவுடன் இணைந்து விரைவில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவக்க உள்ளேன்.