ஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |
மோகன்லாலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது பிருத்விராஜின் கனவு மட்டுமல்ல, இரண்டு தரப்பு ரசிகர்களின் கனவும் கூட. ஆனால் அது நிறைவேறவில்லை என்றாலும், அதற்கும் மேலாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை பிருத்விராஜ் இயக்குவதால் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இரட்டிப்பு சந்தோசம் தான்.
ஆனாலும் வெள்ளை காகிதத்தில் ஒரு கரும்புள்ளி வைத்தது போல அவர்கள் மனதில் ஒரு கலக்கம் ஓடிக்கொண்டு இருக்கிறது.. இந்தப்படத்திற்கு கதை எழுதியுள்ளவர் முரளிகோபி. நடிகரும் கதாசிரியருமான இவர் கதை எழுதிய பிருத்விராஜின் டியான் மற்றும் இந்த வருடம் வெளியான திலீப் நடித்த கம்மாரா சம்பவம் ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெறவில்லை என்பது தான் கலக்கத்திற்கு காரணம்.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இவரது கதை சாதாரண ரசிகர்களால் புரிந்துகொள்வதற்கு சிரமமாக உள்ளது என்கிற குற்றச்சாட்டு நீண்ட நாளாகவே உண்டு. அதனால் லூசிபர் படத்திற்கும் இவர் கதையெழுதியுள்ளதால் இந்தப்படத்தின் ரிசல்ட் நல்லபடியாக வரவேண்டும் என இருதரப்பு ரசிகர்களும் கலக்கத்தில் உள்ளனராம்