ஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |
ஜீத்து ஜோசப் டைரக்சனில் மோகன்லால் மகன் பிரணவ் ஹீரோவாக அறிமுகமான 'ஆதி, இந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது ராம்லீலா ஹிட் படத்தை இயக்கிய அருண் கோபியுடன் இணைந்து இருபத்தியொன்னாம் நூற்றாண்டு என்கிற படத்தில் நடித்து வருகிறார் பிரணவ்.
ஆதி, குடியரசு தினமான ஜன-26 ஆம் தேதி வெளியாகி ஹிட்டானதால், இந்தப்படத்தையும் அதேப்போல சென்டிமென்ட்டாக வரும் 2019ல் குடியரசு தினத்தன்று வெளியிட முடிவு செய்துள்ளார்களாம் . ஆதி படத்தை குடியரசு தினத்தில் வெளியிட்டதற்கே ஒரு சென்டிட்மென்ட் இருக்கிறதாம்.
மோகன்லால் முதன்முதலாக ஆசீர்வாத சினிமாஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதும், அதில் முதல்முதலாக நடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான 'நரசிம்ஹம்' படம் ரிலீசானது. கடந்த 2000-ஆம் ஆண்டில் இதே ஜனவரி-26 ஆம் தேதியில் தான். அதனால் மோகன்லாலின் மகன் படத்தையும் தொடர்ந்து இதே தேதியில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யலாம் என முடிவெடுத்துள்ளார்களாம்.