ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆரண்ய காண்டம், ஜோக்கர் என பல படங்களில் நடித்தவர் குரு சோமசுந்தரம். தற்போது வஞ்சகர் உலகம் என்ற படத்தில் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்துள்ளார். அதோடு, தன்னைத்தேடி வரும் அனைத்து படங்களையுமே ஏற்றுக்கொள்ளாத அவர், படத்திற்கு படம் வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுக்க வாய்ப்பு கிடைக்கும் கதைகளை மட்டுமே ஓகே பண்ணி நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 165வது படத்திலும் குரு சோமசுந்தரம் தற்போது இணைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த படத்தில் ரஜினியுடன் விஜயசேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, நவாஸ்ருதீன் சித்திக் என பலர் நடித்து வரும் நிலையில், தற்போது குரு சோமசுந்தரமும் இணைந்திருக்கிறார். ஆக, ரஜினி படத்தில் இணையும் நடிகர் நடிகைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.