டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அஜித் நடித்த மங்காத்தா படத்தை இயக்கியவர் வெங்கட்பிரபு. அந்த படம் வெற்றி பெற்றதால் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் அஜித்தை வைத்து இயக்குமாறு அஜித் ரசிகர்கள் வெங்கட் பிரபுவிற்கு தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
வெங்கட்பிரபுவும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அஜித் தரப்பில் இருந்து பதில் வராததால் அவர் வேறு படவேலைகளில் இறங்கி விட்டார்.
இந்நிலையில், நேற்றோடு மங்காத்தா வெளியாகி 7 ஆண்டுகளாகி விட்ட நிலையில், ஒரு டுவீட் வெளியிட்டுள்ளார் வெங்கட்பிரபு. அதில், "மங்காத்தா டே வாழ்த்துக்கள், நீங்கள் கேள்விகேட்பதற்கு முன்பே நானே சொல்லிடுறேன் தல தான் சொல்லணும் என டுவீட் செய்துள்ளார்.
அதாவது மங்காத்தா-2 படம் குறித்து என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். அஜித் தான் முடிவு செய்யனும் என்று சொல்கிறார்.