மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
லிங்குசாமி, பா.ரஞ்சித், சிறுத்தை சிவா என இளம் முன்னணி இயக்குநர்கள் பலருக்கும் அட்வான்ஸ் கொடுத்து வைத்துள்ளது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். தற்போது டான்ஸ் மாஸ்டர் ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தேள் என்ற படத்தை தயாரித்து வருகிறது.
இதையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் ஒரு படத்தை எடுக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. தற்போது லிங்குசாமிக்கு பதில் 'விஸ்வாசம்' பட இயக்குநர் சிவாவை வைத்து இ இந்த படத்தை தயாரிக்க ஸ்டுடியோ கிரீன் முடிவு செய்துள்ளது.
அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தை அடுத்து இந்தப்படத்தின் வேலைகளில் சிவா கவனம் செலுத்துவாராம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளிவரும் என்று ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அஜித் - சிவா இருவரும் 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' ஆகிய 4 படங்களில் இணைந்து பணியாற்றிய நிலையில், சிவாவை இயக்குநராக ஒப்பந்தம் செய்தால் அஜித்தின் கால்ஷீட் கிடைக்கும் என நம்புகிறார் ஞானவேல்ராஜா. ஆனால் அஜித்தோ அடுத்தப்படத்துக்கு வேறு இயக்குநரை தேர்வு செய்துள்ளாராம்.