‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், மாப்பிள்ளை கவுண்டர் உள்பட பல படங்களை தயாரித்தவர் மணிவாசகம். படத்தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் 17 ஆண்டுகளுக்கு பிறகு, மகனின் இயக்குனர் கனவை நிறைவேற்ற மீண்டும் தயாரிக்கும் படம் களவாணி மாப்பிள்ளை.
காந்தி மணிவாசகம் இயக்குகிறார். தினேஷ், அதிதி மேனன், ஆனந்தராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், முனீஷ்காந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள். சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு செய்கிறார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். படம் பற்றி காந்தி மணிவாசகம் கூறியதாவது:
இரண்டு மணி நேரம் மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கிற நோக்கில் எடுக்கப்பட்டிருக்கும் படமே களவாணி மாப்பிள்ளை. பெண்களின் மனோபாவமே இந்த படத்தின் மையக்கரு. பெண்கள் காய்கறி கடைக்குப் போனால் அரை கிலோ வெண்டைக்காய் வாங்க கால் கிலோ வெண்டையை உடைத்து உடைத்துப் பார்த்துத் தான் வாங்குவார்கள். அதே மாதிரி ஒரு புடவை வாங்க ஒரு கடையையே புரட்டிப் போட்டு விடுவார்கள்.
அவ்வளவு பார்த்து பார்த்து எச்சரிக்கையாக நடந்து கொள்ளும் அவர்கள் தடுமாறும் இடமும், தடம் மாறும் இடமும் திருமணத்துக்கு மாப்பிள்ளையை தேர்வு செய்வதில் தான். அந்த ஒரு விஷயத்தில் மட்டும் எப்படி கோட்டை விடுகிறார்கள் என்பது மட்டும் இன்று வரை சிதம்பர ரகசியமே.
அப்படித் தான் தான் ஏமாந்து போய் கல்யாணம் செய்து கொண்டது போல் தன் மகளுக்கு நடந்து விடக் கூடாது என்று நினைத்து ஏங்கும் ஒரு தாயின் போராட்டமும், தன் காதல் தான் முக்கியம் என்று நினைக்கும் மகளின் எண்ண ஓட்டமும் தான் படத்தின் கதையோட்டம். இறுதியில் ஜெயித்தது தாயா மகளா என்பது தான் திரைக்கதை. படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. என்றார் இயக்குனர் காந்தி மணிவாசகம்.