Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெண்ணிலா கபடி குழு 2 : மாஸ்டர் கிஷோர், கேப்டன் விக்ராந்த்

30 ஆக, 2018 - 15:07 IST
எழுத்தின் அளவு:
Vennila-Kabadi-Kuzhu-2-update

2009ம் ஆண்டு வெளிவந்த படம் வெண்ணிலா கபடி குழு. சுசீந்திரன் இயக்குனராகவும், விஷ்ணு ஹீரோவாகவும் அறிமுகமான படம். தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. அற்புதம் சினிமா சார்பில் ஏ.பூங்காவனம், என்.ஆனந்த் தயாரிக்கிறார்கள். சுசீந்திரனின் மூலக்கதையை அடிப்படையாக கொண்டு செல்வசேகரன் இயக்குகிறார். வி.செல்வகணேஷ் இசை அமைக்கிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

முதல் வெண்ணிலா கபடி குழுவிற்கு விஷ்ணு கேப்டனாக இருந்தார். அவரது அணியில் சூரி, அப்புக்குட்டி, உள்பட பலர் இருந்தார்கள். பயிற்சியாளராக கிஷோர் இருந்தார். இரண்டாம் பாகத்தில் கிஷோர் தான் பயிற்சியாளர் சூரியும், அப்புக்குட்டி உள்ளிட்ட சிலர் அப்படியே இருக்கிறார்கள். கேப்டன் மட்டும் விஷ்ணுவுக்கு பதில் விக்ராந்த். சரண்யா மோகனுக்கு பதில் அர்த்தனா பினு நடிக்கிறார். வில்லன் பசுபதி. இசை அமைப்பாளர் செல்வகணேசும், ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமியும் முதல் பாகத்தில் பணியாற்றியவர்கள்.


முதல் பாகத்தில் விஷ்ணு இறந்து விடுவதால் இரண்டாம் பாகத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்கு பதில் அவரது நண்பர் விக்ராந்த் களம் இறங்குவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in