கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
இசையமைப்பாளராக பணியாற்றியபோது தனக்கு வாய்ப்புகள் கொடுத்த இயக்குநர்களுக்கு, தற்போது ஹீரோவான பிறகு பதில் மரியாதையாக கால்ஷீட் கொடுத்து கை தூக்கிவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
வெயில் படத்தின் மூலம் தன்னை இசையமைப்பாளராக அறிமுகம் செய்த வசந்தபாலனுக்கு வாய்ப்பு அளித்தார். இவர்களது கூட்டணியில் ஜெயில் படம் உருவாகி இருக்கிறது.
அதேப்போல் தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருந்த ஏ.எல்.விஜய்க்கும் கால்ஷீட் கொடுத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். ஏ.எல்.விஜய் இதுவரை இயக்கியுள்ள 12 படங்களில் 7 படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அந்த நன்றியை மறக்காமல் விஜய்க்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.
இப்படத்திற்கு 'வாட்ச்மேன்' என்று பெயரிட்டுள்ளனர். 'வாட்ச்மேன்' படம் தவிர, "சர்வம் தாள மயம், அடங்காதே, 4ஜி, ஐங்கரன், 100% காதல், குப்பத்து ராஜா, ஜெயில்" என ஏகப்பட்ட படங்கள் ஜி.வி.பிரகாஷ் கைவசம் இருக்கின்றன.
தன்னை வளர்த்துவிட்டவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் ஜி.வி.பிரகாஷ் பாராட்டுக்குரியவர் தான்.