பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் டிரைலர், கடந்த 25ம் தேதியன்று வெளியானது. தமிழில் முதல் முறையாக சில முக்கிய ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து நடிக்கும் படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு. அதனால் தானோ என்னமோ, டிரைலர் வெளியான நான்கு நாட்கள் கழித்தும் யு டியூபில் இன்றும் டிரென்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.
25 வருடங்களுக்கும் மேலாக அந்தந்த டிரென்டிற்கு ஏற்றபடி படங்களைக் கொடுத்து வரும் இயக்குனர் மணிரத்னம், இன்றைய ரசிகர்களையும் கவரும் விதத்தில் இப்படி ஒரு டிரைலரைக் கொடுத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. டிரைலரில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்களில் யாருடைய கதாபாத்திரம் அருமை என ஏற்கெனவே ஒரு போட்டி உருவாகி உள்ளது.
வேறு எந்தப் படத்தின் டிரைலரும் இந்தப் படத்துடன் போட்டி போட முடியாத அளவிற்கு இந்த டிரைலரின் பார்வைகளும் ஏறிக் கொண்டே போகிறது. படத்தை விரைவில் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் ரசிகர்களுக்கு அதிகமாகியுள்ளது.