விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
மலையாள இயக்குனர் ப்ரியதர்ஷன். கே.பாலச்சந்தர், தாசரி நாராயணராவ், ராம நாராயணன் வரிசையில் அதிக படங்களை இயக்கியவர். இதுவரை 95 படங்களை இயக்கி உள்ளார். இந்தியில் மட்டும் 26 படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய காஞ்சிவரம் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அதில் நடித்த பிரகாஷ்ராஜ் தேசிய விருது பெற்றார். தமிழில் சின்ன மணிக்குயிலே, கோபுர வாசலிலே, சினேகிதியே, லேசா லேசா உள்பட பல படங்களை இயக்கினார். கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர் படத்தை இயக்கினார்.
கடந்த 40 ஆண்டுகளாக திரைப்படத்துறைக்கு சிறந்த பங்களிப்பை செய்துள்ள ப்ரியதர்ஷனுக்கு மத்திய பிரதேச அரசு உயரிய கவுரவத்தை அளித்துள்ளது. அந்த மாநில அரசு வழங்கும் சிறந்த திரைப்பட சாதனையாளருக்கான கிஷோர் குமார் விருதை, ப்ரியதர்ஷனுக்கு அறிவித்துள்ளது.
இந்த விருதை இதற்கு முன்பு அமிதாப்பச்சன், ரிஷிகேஷ் முகர்ஜி, குல்சார், ஷியாம் பெனகல் ஆகியோருக்கு மத்திய பிரதேச அரசு வழங்கி உள்ளது. முதன் முதலாக தென்னிந்தியாவிலிருந்து இந்த விருதை பெறுகிறவர் ப்ரியதர்ஷன். விரைவில் கிஷோர் குமாரின் இல்லத்தில் நடக்கும் விழாவில் மாநில முதல்வர் இந்த விருதை ப்ரியதர்ஷனுக்கு வழங்குகிறார்.