ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் படம் 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கமல்ஹாசனும், ஷங்கரும் இதனை முறைப்படி அறிவித்தனர். கமல் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் இசை அமைக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் தாய்லாந்தில் நடக்கிறது.
ரஜினி நடிக்கும் 2.0 படத்தில் தனது பணியை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு வெளியில் வந்து விட்டார் ஷங்கர். அதனால் அவர் தற்போது இந்தியன் 2ம் பாகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். ஸ்கிரிப்ட் பணிகளை முடித்து அதை கமலிடம் கொடுத்து ஓகே வாங்கி விட்டதால் அடுத்த கட்ட பணிகளை தொடங்கியுள்ளார் ஷங்கர். ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுடன் தாய்லாந்துக்கு சென்றுள்ள ஷங்கர். அங்கு ஹெலிகாப்டரில் பறந்தபடி படப்பிடிப்பு லொக்கேஷன்களை பார்வையிட்டுள்ளார். இரண்டு பாடல் காட்சிகளும், ஒரு சண்டை காட்சியும் தாய்லாந்தில் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
கையில் இருக்கும் சபாஷ் நாயுடு படத்தை டிசம்பருக்குள் முடித்து விட்டு ஜனவரியில் இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார் கமல். அதற்கு முன்னதாகவே கமல் இல்லாத காட்சிகளை படமாக்கிவிட ஷங்கர் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.