பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
1999ல் பிரசாந்த் -சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக சினிமாவில் அறிமுகமானவர் திரிஷா. அதன்பிறகு 2002ல் சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த வகையில், திரிஷா சினிமாவில் நடிக்க வந்து 19 ஆண்டுகளாகி விட்டது. அதோடு, ரஜினி தவிர அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்ட திரிஷாவுக்கு, இப்போதுதான் ரஜினியின் 165வது படத்தில் அவருடன் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த படத்தில் சிம்ரனும் முக்கிய வேடத்தில் நடிக் கும் நிலையில், ரஜினிக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது தனது தலைமுடியை கத்தரித்து புதிய ஹேர் ஸ்டை லுடன் கூடிய ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் அவர். அதோடு, ஒரு பெண் தனது தலைமுடியை கத்தரித்தால் அவளுடைய வாழ்க்கையில் மாற்றம் நடக்கும் என்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் திரிஷா.