அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன், இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் சகோதரர் என பலமான சினிமா பின்னணி இருந்தும், சினிமாவில் ஜெயிக்க தொடர்ந்து போராடி வருகிறார் உதயா.
திருநெல்வேலி என்ற படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு உதயா நடித்த எந்தப் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. உதயாவிற்காக ஏ.எல்.விஜய், தலைவா படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் கொடுத்தார். ஆனாலும் உதயா சரியான இடத்தை பிடிக்க இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் உதயா நடித்து முடித்துள்ள படம் தான் உத்தரவு மஹாராஜா. உதயா ஹீரோவாக நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. உதயாவுடன் பிரபு, நாசர், கோவை சரளா, சோனியா, ஸ்ரீமன், மனோபால உள்பட பலர் நடித்துள்ளனர். இவர்கள் தவிர பிரியங்கா, சாரா, நிஷா என 3 ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். ஆஷிப் குரைஷி இயக்கி உள்ளார்.
இது சரித்திரம், பேண்டசி கலந்த த்ரில்லர் கதை. இதில் உதயா 4 கெட்அப்களில் நடித்துள்ளார். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டும் 40 நிமிடங்களுக்கு இடம் பெறுகிறது. கடந்த 2 வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. உதவியாவின் சினிமா கேரியரை தீர்மானிக்கப்பபோகும் படமாக உத்தரவு மஹாராஜா மாறியுள்ளது.