ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' சீசன் 2 நிகழ்ச்சி முதல் சீசன் அளவிற்குச் சிறப்பாக இல்லை என்பது பல ரசிகர்களின் கருத்தாக உள்ளது. அப்படி ஒரு நிகழ்ச்சியை இதுவரை டிவியில் யாரும் பார்க்காத காரணத்தால் முதல் சீசன் பிரபலமாகப் பேசப்பட்டது. அதோடு, அந்த சீசனில் நடிகை ஓவியாவால் நிகழ்ச்சி மேலும் பரபரப்பானது. ஓவியா ஆர்மி என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களைப் பகிரும் அளவிற்கு நிகழ்ச்சியில் பலரும் ஈடுபாட்டுடன் ரசித்தார்கள்.
இரண்டாவது சீசனின் 69வது எபிசோடு இன்று ஒளிபரப்பாக உள்ளது. இன்றுதான் நிகழ்ச்சியின் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்துள்ள விஜயலட்சுமி பங்கேற்பது ஒளிபரப்பாக உள்ளது. ஆனால், நேற்றே அதற்கான புரோமோவை ஒளிபரப்பினார்கள். பலரும் நேற்று விஜயலட்சுமி வீட்டுக்குள் நுழைவதை ஒளிபரப்புவார்கள் எனக் காத்திருந்தார்கள். நிகழ்ச்சியின் முடிவில் அவருடைய வைல்டு கார்டு நுழைவு இன்றுதான் ஒளிபரப்பாகும் எனக் குறிப்பிட்டார்கள்.
சீசன் 2 இப்படியாக போய்க் கொண்டிருக்க, முதல் சீசனின் பிரபலமான ஓவியா நேற்று அவருடைய சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு ஒரு 'ஹாய்' சொல்லியிருந்தார். சிலர் அவரிடம் கேள்விகளையும் கேட்டார்கள். அதில் ஒரு ரசிகர், “பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களை மிஞ்ச யாருமில்லை. மும்தாஜ் அவர் வழியில் சிறப்பாக இருக்கிறார், ஆனால், நீங்கள்தான் முன்னோடி,” என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த ஓவியா, “அனைவருமே நல்லவர்கள்தான், நான் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை” என்று பதிலளித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகப் பேசப்பட்ட ஓவியா, இந்த சீசனை பார்ப்பதில்லை என்று கூறியிருப்பது அவருடைய ஆர்மி ஆட்களுக்கும், பிக் பாஸ் ரசிகர்களுக்கம் அதிர்ச்சியான தகவல்தான்.