சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
உதவி இயக்குனராக இருந்து, நடிகையாக உயர்ந்துள்ளவர், மாசூம் ஷங்கர். நாகேஷ் திரையரங்கம் படத்தை தொடர்ந்து, ஓவியாவுடன், 90 எம். எல்., என்ற படத்தில் நடித்து வருகிறார். தன் திரையுலக அனுபவம் குறித்து அவரிடம் பேசியதிலிருந்து:
உங்கள் சொந்த ஊர்?
நான் டில்லி பொண்ணு தாங்க. அலகாபாதில் படிப்பு முடித்தேன். டில்லியிலேயே அனிமேஷன் முடித்தேன். படிக்கும் போது, 'கிரியேட்டிவ்' துறையில் அதிக ஆர்வம் இருந்தது. என் பெற்றோரும் அதையே விரும்பினர்.
நடிகையானது எப்படி?
காந்திகிரி படத்தில், உதவி இயக்குனராக பணிபுரியும் போது, நடிகர் ஓம்பூரிக்கு வசனம் சொல்லிக் கொடுத்தேன். அப்போது அவர், 'நீ உதவி இயக்குனராக இருக்க வேண்டாம். நடித்தால், நல்ல எதிர்காலம் உண்டு' என்றார்.
அதன் பின், அவரது மனைவி சீமாவிடம் இருந்து, சீரியலில் நடிக்க அழைப்பு வந்தது. அதை தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
கஷ்டப்பட்டு தான், தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தீர்களா?
தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க, நடிகையர் தேர்வு நடப்பதாக, என் தோழி கூறினார். அதில் பங்கேற்றேன். 'பிட்னஸ்' காரணமாக, என்னை நிராகரித்து விட்டனர். என்னை தயார்படுத்தி, மீண்டும் தேர்வுக்கு சென்றேன். முதல் முறை என்பதால், பதற்றத்துடன் கஷ்டமாகவும் இருந்தது. சில நாள் கழித்து, நாகேஷ் திரையரங்கம் படத்தில், முக்கிய பாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
தமிழ் தெரியுமா?
தமிழ் மொழி மீது, துவக்கத்தில் இருந்தே பயம் இருந்தது. ஆனால், தமிழ் மொழி பழமை வாய்ந்தது என்பதால், ஆர்வமுடன் கற்க துவங்கினேன். எனக்கு வசனம் சொல்லித் தரும் உதவியாளர்களிடம், நான் வசனத்தை சரியாக உச்சரிக்கும் வரை விட மாட்டேன். எத்தனை முறை கேட்டாலும், பொறுமையாக, அன்போடு சொல்லித் தருவர். அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்.
90 எம்.எல்., படத்தில் நடிப்பது குறித்து?
ஒரு படத்தில், நிறைய நடிகையர் இருந்தால், சின்ன விஷயங்களை கூட சமாளிப்பது கஷ்டமாக இருக்கும். ஆனால், இயக்குனர் அனிதா உதீப், எங்களை நடிகையாக மட்டுமே பார்க்காமல், தோழியாகவும், சகோதரிகளாவும், சில சமயங்களில் அம்மாவாகவும் இருந்து பார்த்துக் கொண்டார். பொதுவாக, 'ஷூட்டிங் ஸ்பாட்' சீரியசாக தான் இருக்கும். ஆனால், இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட், மிகவும் ஜாலியாக இருந்தது.
ஓவியாவுடன் நடித்த அனுபவம்?
ஓவியா ஒரு டார்லிங். ரொம்ப அன்பானவர். அவரைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.