ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சண்டக்கோழி 2 படத்தை முடித்துவிட்ட விஷால், அடுத்தப்படியாக அயோக்யா படத்தில் நடிக்கிறார். ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், கேஎஸ்,ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலர் முதன்மையான ரோலில் நடிக்கின்றனர்.
வெங்கட் மோகன் இயக்க, சாம் சிஎஸ் இசையமைக்க, லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் மது தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை ஈசிஆரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செட்டில் நடக்கிறது.
பட பூஜையில் தயாரிப்பாளர்கள் ஜிகே.ரெட்டி, தாணு, ரவி பிரசாத், இயக்குநர்கள் கேஎஸ் ரவிக்குமார், முருகதாஸ், லிங்குசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.