ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதன்படி அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களின் டாப் 10 பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பாலிவுட் நடிகர்களான அக்ஷ்ய் குமார் மற்றும் சல்மான் கான் இடம் பிடித்துள்ளனர். அக்ஷ்ய் குமார் ரூ.284 கோடி வருமானத்துடன் 7-வது இடத்திலும், ரூ.270 கோடி வருமானத்துடன் சல்மான் கான் 9-வது இடத்திலும் உள்ளனர்.
1675 கோடி வருமானத்துடன் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி முதல் இடத்தையும், பிரபல மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகரான ராக் எனப்படும் டுவைன் ஜான்சன் 835 கோடி வருமானத்துடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.