வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடிகர் டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதியரின் மூத்த மகள் ஷிவானி. தெலுங்கில் வி.வி.விநாயக் இயக்கத்தில் தயாராகி வரும் 2 ஸ்டேட்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இது ஹிந்தியில் வெளியான 2 ஸ்டேட்ஸ் படத்தின் ரீ-மேக்.
தமிழில், விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கும் கவரிமான் பரம்பரை படத்திலும் நடிக்கிறார் ஷிவானி. மதுரை மண்வாசனை கதையில் உருவாகும் இந்தபடத்தில் கிராமத்து பெண்ணாக கல்லூரி மாணவி வேடத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடந்தபோது தினமும் மகளுடன் ஸ்பாட்டுக்கு விசிட் அடித்த நடிகை ஜீவிதா, ஒவ்வொரு காட்சிகளின் டயலாக் பேப்பரையும் முன்பே வாங்கி மகளுக்கு ரிகர்சல் கொடுத்து கேமரா முன்பு நடிக்க வைத்திருக்கிறார்.