தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நியூயார்க் நகரில், இந்திய சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த நிகழ்வில் ஏற்கனவே பல இந்திய திரையுலக பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தாண்டு நடந்த நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்றார். அவருடன் அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன், நடிகை பூஜா குமார் ஆகியோரும் பங்கேற்றனர். அங்கு இவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு பேசிய கமல்ஹாசன், என் பெயர் கமல்ஹாசன், நான் ஒரு இந்தியன். இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். கேரளாவில் கடும் வெள்ளம் பாதித்துள்ளது. தமிழகத்திலும் சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அந்த பணிகளை மேற்கொள்ள உடனே நான் செல்ல வேண்டும். இந்த மகிழ்ச்சி இங்கு இப்படியே இருக்கட்டும் என்றார்.