'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள யுடர்ன், சிவகார்த்தியேனுடன் நடித்துள்ள சீமராஜா ஆகிய படங்கள் செப்டம்பர் 13-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து சமந்தா ஒரு படத்தில் 70 வயது பாட்டி வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
அந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அந்த படத்தை இயக்கும் நந்தினி ரெட்டி, அந்த கொரியன் படத்த்தின் ரீமேக் உரிமையை முறைப்படி வாங்கியுள்ளாராம். யுடர்ன் ரிலீசுக்குப்பிறகு இப்படம் தொடங்கும் என்கிறார்கள்.
ஒரு வயதான பெண் மீண்டும் இளமையான தோற்றத்துக்கு மாற முயற்சிக்கும் கதையில் இப்படம் உருவாகிறதாம். இந்த சுவராஸ்யமான கதையை கேட்ட சமந்தா இப்படத்தில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வமாக இருக்கிறாராம்.