'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மேயாதமான் படத்தில் ஹீரோவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. அதன் பிறகு மெர்குரி படத்தில் நடித்தார் அவர் நடித்து முடித்துள்ள பூமராங், 60 வயது மாநிறம் படங்கள் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படம் தொடங்கியுள்ளது. படத்தின் தலைப்பு சூப்பர் டூப்பர்.
ப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்குகிறார். ஆண்மை தவறேல் படத்தில் நடித்த துருவா ஹீரோ. அவருக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார்.படத்திற்கு சுந்தர்ராம் ஒளிப்பதிவு செய்கிறார், திவாகரா தியாகராஜன் இசை அமைக்கிறார். நேற்று இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. ஒரே ஷெட்யூலில் அதாவது 45 நாளில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
இது வழக்கமான படம் அல்ல. கதையும், களமும் புதிதாக இருக்கும். நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா முக்கியமான கேரக்டரில் அறிமுகமாகிறார். இணையதளங்களில் பிரபலமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த ஷாரா, சோலோ காமெடியனாக நடிக்கிறார். காதலில் வரும் உளவியில் பிரச்சினைகளை சுவாரஸ்யமாக சொல்ல இருக்கிறோம். என்கிறார் இயக்குனர் அருண் கார்த்திக்.