மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65வது பொதுக்குழு கூட்டம் வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு கூட்டம், ஆகஸ்ட்19-ம் தேதி, ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு சென்னை வாலாஜா சாலையிலுள்ள கலைவாணர் அரங்கில், தலைவர் நாசர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு கூட்டதில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன.
பொதுச்செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்த, துணை தலைவர் கருணாஸ் 2017-2018-க்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட வரவு-செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பார். பொருளாளர் கார்த்தி, எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்தும் உரை நிகழ்த்த, விஷால் கடந்த கால நிர்வாக செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கி ஒப்புதல் பெறுவார்.
மேலும் 2018 - 2021 ஆண்டுக்கான தேர்தல் குறித்தும் முடிவெடுக்கப்படும். துணைத்தலைவர் பொன்வண்ணன் நன்றி உரையுடன் பொதுக்குழு நிறைவடையும். உறுப்பினர் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அரங்கத்தினுள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.