தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கி வரும் விஸ்வாசம் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் அஜித்குமார். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
இதையடுத்து மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை சதுரங்க வேட்டை வினோத் இயக்குவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் வினோத் படத்தில் அஜித் நடிக்கவில்லை என்றும், ஏற்கனவே அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் படத்தில் மீண்டும் அஜித் இணைய இருப்பதாக தகவல் பரவில வருகிறது.