பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
மறைந்த இளம் இயக்குனர் கொல்லுபுடி ஸ்ரீனிவாஸ் நினைவாக அவரது குடும்பத்தினர் விருது ஒன்றை ஏற்படுத்தி ஆண்டுதோறும் சிறந்த அறிமுக இயக்குனர்களுக்கு விருது வழங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் 2018ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நடந்தது.
இந்த ஆண்டுக்கான விருது எ டெத் இன் குன்ஜி படத்தை இயக்கிய பாலிவுட் நடிகை கொங்கனா சென்னுக்கு வழங்கப்பட்டது. இது குஜராத் கலவரத்தை மையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம். ஏற்கெனவே பல விருதுகளை பெற்றிருக்கிறது.
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இந்த விருதினை வழங்கினார். விழாவில் இயக்குனர் கே.பாக்யராஜ், நடிகை சுஹாசினி, அருவி பட இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன். அருவி நாயகி அதிதி பாலன், பூர்ணிமா பாக்யராஜ் உள்பட பலர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.