இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான படம் ''RX100'. கார்த்திகேயா, பாயல் ரஜ்புத் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்த இந்த படம் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய லாபத்தைக் கொடுத்த படம்.
தெலுங்கில் வசூல் ரீதியாக வெற்றிபெற்ற இப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் பண்ண இருக்கின்றனர். அதை தெலுங்கில் இயக்கிய அஜய் பூபதியே இயக்க இருக்கிறார்!
இதற்கிடையில் இந்தப் படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய பலத்த போட்டி ஏற்பட்டது. கடைசியில் இப்படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை 'ஆராஸ் சினிமாஸ்' நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஆதி.
''RX100' படத்தின் தமிழ்ரீமேக் ரைட்ஸை வாங்கி வைத்திருந்த ஆதி, தன்னை ஹீரோவாக வைத்து எடுப்பதாக இருந்தால் ரைட்ஸ் தருவேன் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். அதனடிப்படையிலேயே ஆதியை வைத்து இந்தப்படத்தை 'ஆராஸ் சினிமாஸ்' தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.