பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
ரஷியாவில் பிறந்து, வளர்ந்த தெலுங்கு பொண்ணு ஸ்வாதி. இயற்பெயர் செவல்ட்னா. சினிமாவுக்காக ஸ்வாதி என பெயர் மாற்றினார். தெலுங்கு படங்களில் அறிமுகமான ஸ்வாதி, சுப்பிரமணிபுரம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இந்த தெத்துப்பல் அழகிக்கு தமிழிலும் நல்ல இடம் கிடைத்தது. போராளி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யட்சன், யாக்கை, வடகறி உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் தமிழைவிட தெலுங்கில்தான் அதிகம் நடித்தார்.
இப்போது ஸ்வாதிக்கு திருமணம். ஒரு சிலருடன் ஸ்வாதி, கிசுகிசுக்கப்பட்டிருந்தாலும் தீவிரமாக காதலித்தது விகாஸ் என்ற கேரளாவைச் சேர்ந்த விமான பைலட்டை. மலேசியன் ஏர்லைன்சில் பணிபுரிகிறார். இப்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கு இருவரது பெற்றோர்களும் பச்சைக்கொடி காட்டிவிட்டனர்.
ஸ்வாதி, விகாஸ் திருமணம் வருகிற 30ந் தேதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி செப்டம்பர் 2ந் தேதி கொச்சியில் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு ஸ்வாதி கணவருடன் இந்தோனேஷியா நாட்டில் குடியேறுகிறார்.