ஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக உயர்ந்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் முன்னணி நாயகியாக மாறி, ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து, கனவுக் கன்னியாக கொண்டாடப்பட்டவர் ஸ்ரீதேவி.
கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி துபாயில் நெருங்கிய உறவினரின் திருமணத்திற்குச் சென்றிருந்த போது மாரடைப்பால் மரணமடைந்தார். அவருடைய திடீர் மறைவு இந்தியத் திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்ரீதேவி போன்று இந்தியத் திரையுலகின் முக்கியமான மொழிகளில் தனது திறமையால், அழகால் ஆட்சி செய்த நடிகையை மீண்டும் பார்க்க முடியுமா என்பது சந்தேகம் தான். ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிந்தைய அவருடைய பிறந்தநாள் இன்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் பலரும் ஸ்ரீதேவியின் புகைப்படங்களைப் பகிர்ந்து அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.
ஸ்ரீதேவி மறைவுக்குப் பின் வரும் முதல் பிறந்தநாள் இது என்பதால் பலருடைய பதிவுகள் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. திரையுலகப் பிரபலங்களை விட ரசிகர்கள்தான் அதிகமாக ஸ்ரீதேவியை நினைவு கூர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.