ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
பட்டதாரி, கேரள நாட்டிளம் பெண்களுடனே உள்பட சில படங்களில் நடித்தவர் அபி சரவணன். இவர் தற்போது எட்டும் வரை, பட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதில், எட்டும் வரை என்ற படத்தில் பிளஸ்-2 படிக்கும் மாணவனாக நடிக்கிறார். 17 வயது மாணவனுடைய இன்றைய சமுதாய பார்வையை சொல்லும் கதையில் இந்த படம் தயாராகிறது. அந்த மாணவன் இந்த சமுதாயத்தில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நினைக்கிறான் என்பதுதான் இந்த படம்.
சுசீந்திரனின் அசோசியேட் சிவாஜி என்பவர் இயக்கும் இந்த படத்தில் அபிசரவணனுடன், ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் நடிப்பது குறித்து அபிசரவணன் கூறுகையில்,
இந்த படத்தில் பிளஸ்-2 மாணவனாக நடிக்க 18 கிலோ வெயிட் குறைத்திருக்கிறேன். அந்த வகையில், ஒரு கதபாத்திரத்திற்காக முதன்முறையாக எனது வெயிட்டை குறைத்து நடிக்கிறேன். இதேபோல் அடுத்தடுத்து நடிக்கும் படங்களுக்காகவும் முழுமையாக எனது கெட்டப்பை மாற்றி நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறும் அபி சரவணன், இந்த எட்டும் வரை படத்தைத் தொடர்ந்து பட்டம் என்ற இன்னொரு படத்திலும் நடிப்பதாகவும், தான் ஆட்டோ டிரைவராக நடிக்கும் அந்த படத்தில் பள்ளிப் பருவத்திலே படத்தில் நடித்த வெண்பா நாயகியாக நடிப்பதாக சொல்கிறார்.